Adyar

by admin
0 comments
adyar

சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கொத்து கொத்தாக காகங்கள் விழுந்து சாகின்றன. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் செத்துப்போன காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் காகங்களை தொட வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆங்காங்கே பூங்காங்கள் உள்ளன. இந்த பூங்காக்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு விளையாட்டு திடலாக இருப்பதோடு, மக்கள் ஓய்வெடுக்கவும், நடைப்பயிற்சி செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடையாறு இந்திரா நகரில் பூங்கா அமைந்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக இந்த பூங்காவில் காகங்கள் மர்மமான முறையில் இறக்கின்றன. வானில் பறக்கும் காகங்கள் திடீரென்று கீழே விழுந்து இறக்கின்றன. இதனால் பூங்காவிற்கு செல்லும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து பூங்காவிற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழங்கத்துக்கு ஆய்வுக்கான அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி பூங்காவில் பணியாற்றி வரும் காவலாளி குட்டி கூறுகையில், ,‛‛ கடந்த 4 முதல் 4 நாட்களாக பூங்காவில் காகங்கள் விழுந்து இறக்கின்றன. வானில் இருந்து கீழே விழுந்து இறக்கும் காகங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. வானில் இருந்து கீழே விழும் காகங்கள் உடனடியாக இறப்பது இல்லை. ஒருநாள் முழுவதும் காகங்கள் நின்ற இடத்திலேயே நின்று மடிகின்றன. ” என்றார்.

You may also like

Leave a Comment

Tamiloor is the Best Newspaper and Magazine WordPress Theme with tons of options and demos ready to import. This theme is perfect for blogs and excellent for online stores, news, magazine or review sites. Buy Soledad now!

Edtior's Picks

Latest Articles

தமிழ் ஊர்