Chennai

by admin
0 comments
chennai

சென்னை: இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பத்தை நடத்த கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.. ஆனால், குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக்கொண்டு வெளியே சென்று வேலை பார்க்க முடியாத பல பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுதான் இந்த ‘டோர் மேட்’ (Door Mat) தயாரிக்கும் தொழில்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

சோஷியல் மீடியாவில் இது தொடர்பான ஒரு வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இப்போது பல இல்லத்தரசிகள் இந்த தொழிலை நோக்கி திரும்பி வருகிறார்களாம்.. “பழைய துணியில் இவ்வளவு வருமானமா?” என்று ஆச்சரியப்படுபவர்கள், இதிலுள்ள லாபக் கணக்கைப் பார்த்தால் கண்டிப்பாக அசந்து போவார்கள்..

மத்திய அரசு நிதியுதவி

இப்படி சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு, நம்முடைய தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.. குறிப்பாக, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM) மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மூலம் சுய உதவிக் குழுக்களில் (SHG) உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவி வழங்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி, பெண்கள் எந்தவிதமான சொத்துப் பிணையும் இல்லாமல், சுமார் 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது..

You may also like

Leave a Comment

Tamiloor is the Best Newspaper and Magazine WordPress Theme with tons of options and demos ready to import. This theme is perfect for blogs and excellent for online stores, news, magazine or review sites. Buy Soledad now!

Edtior's Picks

Latest Articles

தமிழ் ஊர்